Wednesday 23 May 2012

எங்களைப் பற்றி

அமைவிடம் :
வள்ளலார் அறக்கட்டளை மற்றும் வள்ளலார் கருணை இல்லம் , விருதுநகர் மாவட்டம் , அருப்புக்கோட்டை நகரிலே அமைந்துள்ளது.

தொடங்கப்பட்ட காலம் :
கடந்த 2004 ஆம் ஆண்டு  , சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, இன்று சிறந்த முறையிலே செயல்பட்டு வருகிறது.

நிறுவநர் :
திரு.கு.வேல்முருகன்  (ஆசிரியர்),

செயல்பாடு :
ஆதரவற்ற முதியவர்கள், உடல் குறைஉள்ளோர் போன்றவர்களுக்கு , தற்போது தினமும் மதியம் ஒருபொழுது மட்டும் அன்னதான சேவை நடைபெற்று வருகிறது.  அன்பர்கள் தங்களது , பிறந்தநாள் மற்றும் திருமணநாள் போன்ற விசேஷ நாட்களில் தாங்களாகவே முன்வந்து அன்னதான சேவை செய்கின்றனர்.

நோக்கம் :
ஒருபொழுது மட்டும் நடைபெறும் அன்னதான சேவை , மூன்று பொழுதும் சிறப்பான முறையிலே நடைபெற வேண்டும். நிரந்தரமாக இங்கேயே தங்க விரும்பும் முதியவர்களுக்கு ஒரு முதியோர் இல்லம் அமைத்திட வேண்டும்.

அறக்கட்டளை :
இந்த அறக்கட்டளை முறையாக பதியவு செய்யப்பட்டு , வங்கி கணக்கும் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல் பட்டு வருகிறது. திறமையான , நேர்மையான , சேவை உள்ளம் கொண்ட பெரியோர்கள் கொண்ட நிர்வாக குழு அமைக்கப் பட்டு , அறக்கட்டளை நிர்வகிக்கப்படுகிறது.
பதிவு எண் :860 / 2011 .
வங்கி : TMB - Aruppukkottai கிளை
வங்கி கணக்கின் பெயர் : VALLALAR   ARAKKATTALI  ARUPUKKOTTAI  
வங்கி கணக்கு எண் : 309582 

உங்களின் பங்களிப்பு :
அறக்கட்டளையின் வளர்ச்சியில் , உடலால் , ஆலோசனையால் , பொருளால் , வழிநடத்துதலால் என பல வகையிலும் தங்களின் பங்கேற்ப்பு வரவேர்க்கப் படுகிறது.  பணமாக தந்து இந்த சேவையில் பங்கேற்க விரும்பும் அன்பர்கள் , பணமாகவோ , DD / CHEQUE மூலமாகவோ அனுப்பலாம். அன்பர்கள்   தயவு செய்து ஒருமுறை நேரில் வந்து எங்களது சேவையை நேரில் பார்த்து அறிந்துக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

தொடர்பு :
வள்ளலார் அறக்கட்டளை மற்றும் வள்ளலார் கருணை இல்லம் ,

அருள்மிகு கொண்டலம்மன் கோவில் தெரு,
101 , விருதுநகர் சாலை , அருப்புகோட்டை ,
விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு. - 626101
நிறுவநர் : திரு. கு.வேல்முருகன் ( ஆசிரியர் )
செல் : 9788421116

 இந்த அறக்கட்டளை குறித்த வீடியோ காட்சியினைக் காண இங்கே சொடுக்கவும்
http://www.youtube.com/watch?v=WnCm4UkTlSc&feature=player_detailpage

வரவேற்ப்பு

அருட்பெரும் ஜோதி ! அருட்பெரும் ஜோதி !
தனிப்பெரும் கருணை ! அருட்பெரும் ஜோதி !

அனைவருக்கும் இனிய வணக்கங்கள் !
வள்ளலார் அறக்கட்டளை மற்றும் வள்ளலார் கருணை இல்லம்
 தங்களை அன்புடன் வரவேற்கிறது .

இந்த இடுகைக்கு வருகை தந்த தங்கள் அனைவருக்கும்
வள்ளல் பெருமானின் கருணை கிடைத்திட வேண்டுகிறோம்.